Tuesday, July 11, 2006

மும்பையில் மறுபடியும் ஒரு பயங்கரம் !

இன்று மாலை 6 - 6.30 PM, அதாவது 30 நிமிட நேரத்தில் மும்பையில் 7 குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன. இந்த தொடர் குண்டு வெடிப்பு மும்பையின் மேற்கு ரயில் (western railway) பாதையில் அமைந்துள்ள சந்திப்புகளில் நடந்துள்ளது. மாதுங்கா, மாஹிம், சாந்தாகுரூஸ், கார், ஜோகேஷ்வரி, பயந்தர், போரிவிலி ஆகிய இடங்களில் நடந்த இந்த கோர சம்பவத்தில் 40-50 பேர் உயிரிழந்துள்ளனர். எண்ணிக்கை அதிகரிக்கலாம் ! பலர் காயமடைந்துள்ளனர். NDTV-இல் பார்த்த சில காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

தில்லியிலிருந்து கிடைத்ததாகக் கூறப்படும் இன்டெலிஜன்ஸ் தகவல்கள், Lashkar-e-Toiba தீவிரவாதிகளே (தாவூதின் துணையோடு) இந்த படு பாதகச் செயலை நிறைவேற்றியதாக தெரிவிக்கின்றன. இந்த கொலைகாரர்கள் கிட்டத்தட்ட 8 மாதங்கள் மும்பையிலேயே தங்கி, திட்டமிட்டு இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது. தீவிரவாதிகள் இதற்குத் தேவையான, பெரிய அளவிலான வெடி மருந்து பொருட்களை எவ்வாறு கடத்தி மும்பைக்கு எடுத்து வந்தார்கள் என்பது ஒரு பெரிய கேள்வி ! இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதைத் தவிர தற்போது வேறென்ன நாம் செய்ய இயலும் ? இந்த பயங்கரத்தைச் செய்த தீவிரவாத ஈனப்பிறவிகளை (இவர்களை மிருகங்களுடன் ஒப்பிடுவது, அவற்றுக்கு கேவலம்!) என்ன செய்தால் தகும் ?

என்றென்றும் அன்புடன்
பாலா

16 மறுமொழிகள்:

நாமக்கல் சிபி said...

இந்தியன்:
மும்பை பங்கு சந்தையில் குண்டுப் போட்டங்க, கோவை தொடர் குண்டு வெடிப்பு நடத்தனாங்க, கார்கிலை பிடிச்சாங்க, பார்லிமெண்ட்ல குண்டுப் போட்டங்க, இராணுவ முகாம்ல புகுந்து இராணுவத்தினரின் மனைவி மற்றும் பிள்ளைகளைக் கொன்னானுங்க, மும்பை இந்தியா கேட் முன்னாடி குண்டு வெச்சாங்க, தீபாவளிக்கு முன் தினம் டெல்லியில தொடர் குண்டு வெடிப்பு நடத்தனாங்க இப்ப மறுபடியும் மும்பை. டெய்லி ஸ்ரீநகர்ல வேற குண்டு வெடிப்பானுங்க.
நாங்க சும்மா விட்டுட்டோம்.

அமெரிக்கன்:
இவ்வளவு பண்ணியும் நீங்க சும்மா இருக்கீங்களா. ஏன்?

இந்தியன்:
ஏன்னா, எவ்வளவு குண்டுப்போட்டாலும் தாங்கிக்கிறாண்ட, இவன் ரொம்ப நல்லவண்டானு UNO சொல்லிடுச்சி...

:-(((

╬அதி. அழகு╬ said...

1. குற்றவாளிகளை ஒரு வாரத்துக்குள் பிடிக்க வேண்டும்.

2. விசாரணை மூன்று நாட்கள் மட்டும்.

3. ஒரு இரயில் பெட்டியில் குற்றவாளிகளை அடைத்து, அதனடியில் வெடிகுண்டுகளை இணைக்க வேண்டும்.

4. இரயில் பெட்டி வெடிக்க வைக்கப் படும் நாளையும் நேரத்தையும் இடத்தையும் அறிவித்து விடவேண்டும்.

5. பொதுமக்கள் - குறிப்பாக உயிரிழந்தோரின் குடும்பத்தினர் கண்முன்னே இரயில் பெட்டியை வெடிக்க வைக்க வேண்டும்.

6. தொலைக் காட்சியில் திரும்பத் திரும்ப இத்தண்டனை காட்டப் படுவேண்டும்.

முக்கியப் பின்குறிப்பு: குற்றவாளிகளைப் பிடித்துச் சிறையிலடைத்து நம் வரிப் பணத்தில் அவர்களுக்குச் சோறு போட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

enRenRum-anbudan.BALA said...

வெட்டிப்பயல்,
Black Humour :(

These terrorists know and hit where it hurts, the hardest, and pains, the most !!!

அழகு,
I believe what you suggest is a very good punishment and deterrence for these cowards !!!

ஜயராமன் said...

அழகு அவர்களே,

அந்த தீவிரவாதிகளை தண்டிப்பது கிடக்கும்.

ஆனால், நம் ஓட்டை வாங்கிக்கொண்டு ஒரு எழவும் பண்ணாமல் இந்த தீவிரவாதத்தை வளர்த்துவிட்டு தாங்கள் மட்டும் எப்போதும் பாதுகாப்புடன் அரசாங்க வரிப்பணத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்களே, இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் அவர்களை என்ன செய்ய?

பார்லிமெண்டில் தாக்குதல் நடந்தது. இவர்களால் ஒரு மண்ணும் நடக்கவில்லை. சமீபத்தில் டெல்லி மார்க்கெட்டில் தீபாவளிக்கு பாம். அப்போதும் வழக்கமான மாரடைப்புதான் (இந்தியா தீவிரவாத்த்தை அடியோடு வேரறுக்க உறுதி பூண்டுள்ளது) என்று வாய் கூசாமல் ஒவ்வொரு முறையும் இவர்கள் வெட்கமில்லாமல் பேசிக்கொண்டு ஓட்டுக்காக இந்த தீவிரவாதிகளிடம் சல்லாபம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

வாராணசியில் பாம் வெடித்த போதும், வெட்கமில்லாமல் அதே டயலாக் அடித்துவிட்டு மறுபடியும் ஒன்றையும் பிடுங்கவில்லை. இப்போது பம்பாயில். வழக்கம்போல பிரதமரும், உள்துறையும் 'அமைதி காக்க' வேண்டுகோள் விட்டிருக்கிறார்கள்.

இவர்களை கூப்பிட்டு தண்டவாளத்தில் கட்டி ரயிலை ஏற்றி 'அமைதி காக்க' சொல்ல வேண்டும்.

இத்தனை கோடி செலவழித்து என்னத்தை புடிங்கினார்கள் இவர்கள். என்ன உளவுத்துறை? இந்த மாதிரி பெரிய தீவிரவாதத்தை கூட முன்னாடி அறியாமல்.

இந்தியன் என்று சொல்லிக்கொண்டு இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கும் நாம்தாம் விவஸ்தை கெட்டவர்கள்

நன்றி

சல்மான் said...

கடுமையாக சாடப்பட வேண்டியது. அப்பாவிகளுக்கு என்ன ஆறுதல் சொல்வது? குற்றவாளிகளுக்கு எவ்வித தயவுதாட்சன்யம் காண்பிக்ககூடாது

சல்மான்

துளசி கோபால் said...

என்னங்க இது அநியாயம். இப்படிச் செஞ்சுட்டாங்களே.

கூட்டங்கூட்டமா மக்களைக் கொன்னு குவிக்கறாங்களே.

சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு என்னன்னு
ஆறுதல் சொல்ல முடியும்?

லிவிங் ஸ்மைல் said...

உயிரின் மதிப்பு என்னவென்று தெரியாமல், உணர்வின், பாசத்தின் பந்ததின் இழப்பு என்னவென்று தெரியாமல் (ஒருவேளை தெரிந்தேதான்) செய்யும் இவர்களுக்கும், இவர்களை ஊக்குவிக்குத்துக் குளிர்காயும் உள்ளூர் அரசியல் கபோதிகளுக்கும் உயிர்மூச்சி உண்மையில் இதயத்திலிருந்தா வருகிறது.. யோசித்து யோசித்துக் குழம்பிப் போகிறேன்..

எதை சாதிக்க இதெல்லாம்..?

தகடூர் கோபி(Gopi) said...

:-( சோகமான செய்தி.

குற்றவாளிகளுக்கு மட்டுமல்லாமல், அவர்களோடு தொடர்புடைய, இந்தத் திட்டம் குறித்து முன்பே தெரிந்த, ஆதரவளித்த, அனைவருக்கும் (அவர்கள் யாராய் இருந்தாலும்) அழகு சொன்ன தண்டனையை தரவேண்டும்.

உலகம் முழுதும் அதை ஒளிபரப்ப வேண்டும்.

enRenRum-anbudan.BALA said...

அன்பான நண்பர்களே (வெட்டிப்பயல், அழகு, ஜயராமன், சல்மான், துளசி, CT, லிவிங் ஸ்மைல், கோபி),
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

பலரும் ஒருங்கிணைந்து தீவிரவாதத்திற்கு எதிராகவும், இந்திய ஒற்றுமைக்கு ஆதரவாகவும் ஓங்கி குரல் எழுப்பியிருப்பது, நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. தீவிரவாதிகள்
ராணுவம் மற்றும் போலீஸுக்கு எதிராக மேற்கொள்ளும் சில தாக்குதல்களை கூட ஏதாவது ஒரு வகையில் நியாயப்படுத்த முடியும். ஆனால், தற்காத்துக் கொள்ள
வழியில்லா அப்பாவி பொதுமக்கள் மீது இந்த வெறி பிடித்த தீவிரவாத சைக்கோ நோயாளிகள் கட்டவிழ்த்து விடும் படுபாதகத்தை உலகில் உள்ள எந்த சித்தாந்தத்தை
வைத்தும் நியாயப்படுத்தவே முடியாது ! அரசும், அரசியல்வாதிகளும், இனிமேலாவது விழித்துக் கொண்டு, தீவிரவாதத்தை அடியோடு நசுக்க அசாதாரணமான
நடவடிக்கைகள் எடுத்தால் தான் இந்தியா பிழைக்கும் ! இந்த சமயத்தில் இந்திரா காந்தி (அவரும் தவறுகள் இழைத்திருந்தாலும்!) தான் நினைவுக்கு வருகிறார் !

பார்லிமெண்ட் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானபோது நான் ஒரு ஆங்கில தினசரிக்கு எழுதியது கீழே:

On one hand, one feels terribly sad for the death of security personnel who laid down their lives battling the treacherous and mindless fiyadeens, for protecting our committment to democracy. On the other hand, this incident serves as a "Divine" reminder
to those evil,greedy and corruptbureaucrats/politicians who swindled public money in procurement of coffins for the Kargil martyrs, that they too can get packed in one of those coffin boxes, if they do not mend their ways !!! It is another irony that
the hard earned money of the public, flowing in as taxes, is so easily available for the corrupt to loot at will while we, as a Nation, move backwards !!!

One wonders how an attack on a bunch, comprised mostly of arrogant, corrupt and small minded bigots be termed as "an attack on
democracy" or "an attack on the Nation" ? Actually, Terrorism is more about killing of innocent people and security personnel,
since the former is defenceless and the later is in the line of fire shielding those who are generally unworthy of protection. Crores and crores of public money is spent on security to politicians as they go around attending public meetings/seminars, fly
to different countries, while our honourable Finance minister is entrusted to bring in more and more of tax money, by squeezing the common man with sky-high levies !!!


Really, "HOT PURSUIT" should be adopted by the people of India against our politicians to cleanse our democratic system, in the
first place and then, against the terrorists !!! Our country needs more of patriotic statesmen to rule us, if we, as a nation,
are to develop as a front-runner.

ஓகை said...

அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதத் தன்மையை அரசியல்வாதிகள் அடையவேண்டும். அடையச் செய்யவேண்டும். மதத்திற்கு அப்பாற்பட்ட மனிதத்தன்மையை மதவாதிகள் அடையவேண்டும். அடையச் செய்யவேண்டும்.

வாசகன் said...

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதில் நாம் இந்தியர்களாக, சாதி, மத, மாநில, மொழிப்பாகுபாடுகளைத் தாண்டி ஒன்றிணைய வேண்டும்.

குற்றவாளிகளைத் தண்டிக்காமல் (அ) தப்பவிட்டு (இந்துவோ, முஸ்லிமோ, மற்றவரோ) அந்த மதங்களின் மீது தாக்குதல் நடத்தவும் அம்மதம் சார்ந்த பொதுமக்களை தனிமைப்படுத்த கேவலமாக இத்தருணத்தை பயன்படுத்த நினைப்பதும், அரசியல் ஆதாயக்கணக்கு போடுவதும் சிந்தனை பயங்கரவாதமாகி பவுதீக பயங்கரவாதத்திற்கு மேலும் உரமூட்டுகிறது என்பதையும் இந்த அரசியல்பூசாரிகளுக்கும் மதவியாபாரிகளுக்கும் உணர்த்தியாக வேண்டும்

Amar said...

Oh get over it!

Nothing is going to happen.
NOTHING at all!

If you're dead, they'll hold a funeral.That ALONE will happen.

Some fatmen will be arrested, tried for umpteen years during the course of which the Arundhati Roys will come out in full support of those 'tyrannised' by the Government of India.Eventually, the pigs will be released....

Meanwhile another module will plan the next attack and the cycle will continue.

This shameless country and its shameless people have been tolerating a STATE ASSEMBLY passing a resolution to release a terrorist pig held in Coimbatore prison!

And the same pigs who supported that resolutions are today putting up a class act!

Shove that in the face of those who lost their families and friends in the 98 blast!

I suggest we change our state title to "Republic of Impotents" than "Republic of India".

A nation of eunuchs and appeasers who have no respect whatsoever for themselves!

enRenRum-anbudan.BALA said...

ஓகை, ராஜா, சமுத்ரா,
கருத்துக்களுக்கு நன்றி !

ரொம்ப ஆற்றாமையோடும், அறச் சீற்றத்தோடும் எழுதி இருக்கிறீர்கள் ! நல்லது ஏதாவது நடந்தால் சரி.

enRenRum-anbudan.BALA said...

CT,
Thanks for your comments !
---BALA

அருண்மொழி said...

CT,

//None of the politicians from tamilnadu have expressed anything, which is really sad.//

They have expressed their opinion. Please see this link http://www.hindu.com/2006/07/13/stories/2006071311750400.htm

The other papers may have decided not to publish their comments (like some of the bloggers) :-)

enRenRum-anbudan.BALA said...

அருண்மொழி,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails